சிங்கப்பூரில் ஷூ வில் ரகசிய கேமரா வைத்து 3,200 பெண்களின் அந்தரங்க வீடியோக்களையும் மருத்துவர் ஒருவர் பதிவு செய்தது முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. சிகிச்சைக்கு வரும் பெண்கள் மட்டுமின்றி மால்கள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்றும் வீடியோ எடுத்துள்ளார். கிட்டத்தட்ட 630க்கும் மேற்பட்ட பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இந்த வீடியோக்களை மருத்துவர் எடுத்துள்ளார்.
பள்ளி விழாவில் மாணவர்போல சீருடை அணிந்துகொண்டு 97 வீடியோக்களை எடுத்துள்ளார்.குறிப்பாக குட்டை பாவாடை அணிந்த பெண்களே இவரின் குறி. ஒரு நாள் வசமாக சிக்க மூன்று ஆண்டு சிறை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவர் பணியின் மாண்பை குறைத்த அவரின் உரிமத்தை சிங்கப்பூர் ரத்து செய்துள்ளது.