தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையை தடுப்பதில் அக்கறை காட்டுவதை போல புகையிலை பொருட்களின் விற்பனையை தடுப்பதிலும் தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டும் ராமதாஸ் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் குட்கா விற்பனை முற்றிலுமாக தடுக்கப்படும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குட்கா பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மட்டும் தான் மாணவர்களை சீரழிக்கிறது என்று கூற முடியாது. அவற்றுக்கு இணையாக புகையிலை பொருட்களும் மாணவர்களை சீரழிக்கின்றன. புகையிலை பழக்கத்தால் வருடத்திற்கு 13 லட்சம் பேர் பலியாகி வருகின்றனர். எனவே குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையை தடுப்பதில் காட்டும் அதே அக்கறையை சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டும். புகையிலை இல்லாத தமிழகத்தை உருவாக்கி இளைஞர்களை காப்பாற்றுவதே இலக்காக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.