திருவண்ணாமலையில் குடும்ப பிரச்சனையினால் பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசபாக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள தென் பள்ளிப்பட்டு இலங்கை தமிழர்களின் முகாமை சேர்ந்த தம்பதிகள் கனகராஜ் மற்றும் மேரி. இத்தம்பதிகளுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கனகராஜ் மற்றும் மேரி இருவரும் குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். சம்மபவத்தன்று இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டதில் மன விரக்தியில் இருந்த மேரி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
அதன்பின்பு அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மேரி உயிரிழந்தார். இதனால் அந்த மூன்று குழந்தைகளும் தாயை இழந்து அழுது கொண்டிருக்கும் காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. மேலும் காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.