இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்கள் ஒவ்வொரு மாதமும் மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, தானியங்கள், பருப்பு , எண்ணெய், உள்ளிட்ட பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் வேலைக்காக இடம் பெயரும் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு அவர்களும் பயன்பெறும் அடிப்படையில் இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமும் கொண்டு வரப்பட்டது. இப்போது அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது.
இதன் வாயிலாக மற்ற மாநிலங்களில் தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வசிக்கும் மாநிலங்களிலுள்ள ரேஷன் கடைகள் வாயிலாக பொருட்களை பெற்று வருகின்றனர். இதனிடையில் ரேஷன் அட்டை முக்கியமான ஆவணமாகவும், இருப்பிட சான்றாகவும் இருப்பதால் தற்போது கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரேஷன் அட்டை மூலம் உணவுதானியங்களை வாங்கவில்லையெனில் அந்த ரேஷன் அட்டையானது ரத்து செய்யப்படும்.
அதாவது சுமார் 6 மாதங்களாக ரேஷன் கார்டை பயன்படுத்தி உணவுதானியங்கள் வாங்கவில்லையெனில் அந்த குடும்ப அட்டைதாரருக்கு பொருட்கள் தேவையில்லை என்று கருதப்பட்டு கார்டு ரத்தாகிவிடும். இத்தகைய சமயத்தில் AePDS எனும் இணையதளம் மூலம் “Ration Card Correction” என்பதனை தேர்தெடுத்து கார்டு திருத்தம் பக்கத்தில் பிழைகள் இருந்தால் அதனை சரிசெய்து சமர்ப்பிக்க வேண்டும். அப்போது விண்ணப்பத்தினை ஏற்றுக் கொண்டால் ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டு மறுபடியும் செயல்படுத்தப்படும்.