தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிந்தது. அதுமட்டுமின்றி எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மழை வெள்ளத்தினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் புதுச்சேரியில் கனமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்தவாரம் முதல் 5000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
சிவப்பு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என கடந்த மாதம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அடுத்த வாரம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.