தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் மாத உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக அரசு கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவித்தொகை வழங்கியது. அதனைப் போல தேர்தலின்போது கூறியதைப்போல மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஆறு மாதங்களில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் மாத உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குடும்பத் தலைவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. எப்போது தெரியுமா?…. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்….!!!!
