Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“குடும்பத் தகராறு” தேசியக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்….. ஈரோட்டில் திடீர் பரபரப்பு….!!!!

திடீரென ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்ப்பு பிராணிகள் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவியுடன் சாந்தகுமாருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இவர் அரசு மருத்துவமனையில் உள்ள ரவுண்டானா பகுதிக்கு வந்தார். அதன்பிறகு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்ற பாதகையை கழுத்தில் தொங்க விட்டுவிட்டு கையில் தேசிய கொடியுடன் தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் தன்னுடைய மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறை தீர்த்து வைக்க வேண்டும் என்று கூறினார். மேலும் காவல்துறையினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடையாது என்று கூறி சாந்தகுமாருக்கு அட்வைஸ் கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |