திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 45 வயது மதிக்கத்தக்க நபர் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்த போது அதில் மண்ணெண்ணெய் கேன் இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கே.புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தாய்முத்து என்பது தெரியவந்தது.
இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் குளத்தின் அருகே வண்டிபாதை அமைப்பதற்காக வந்த அதிகாரிகளை சிலர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக மனு கொடுத்ததற்கு முத்துவையும், அவரது குடும்பத்தினரையும் சிலர் மிரட்டுகின்றனர். இதனால் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்ய முடிவு எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் முத்துவை எச்சரித்து மனு கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.