Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற நண்பர்கள்…. திடீரென கொழுந்து விட்டு எறிந்த வீடுகள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

2  வீடுகளில் பற்றி எறிந்த  தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நாகங்குடி பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர்  வீட்டின் அருகே இவரது நண்பரான வீரையன்  என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சிவா, வீரையன் ஆகிய 2 பேரும் குடும்பத்துடன் அருகில் அமைந்துள்ள கோவிலுக்கு சென்று விட்டனர். இப்போது திடீரென சிவா, வீரையன் ஆகிய 2  பேரின் குடிசை வீடும்  தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 1  மணி நேரம் போராடி வீட்டில் பற்றி எரிந்த தீயை அனைத்தனர். இந்த விபத்தில்  2  வீடுகளும்  தேசமடைந்துள்ளது . மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |