தேனியில் கடன் தொல்லையால் மனமுடைந்த கொத்தனார் விஷத்தினை அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடியில் கொத்தனார் வேலை பார்த்து வந்த இளங்கோவன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மனைவி சுதாவும், மகன் விஷ்ணுவும் உள்ளனர். இந்நிலையில் இளங்கோவன் குடும்ப தேவைக்காக பல நபர்களிடம் கடன் வாங்கி வந்துள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்திருக்கிறார்.
இதற்கிடையே இளங்கோவனிடம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பித் தருமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த இளங்கோவன் விஷம் அருந்தி வீட்டில் மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி இளங்கோவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்தார் என்று கூறியுள்ளார்.