Categories
மாநில செய்திகள்

குடும்பத்தில் பிரச்சனை!…. ஒரே ஒரு போனில் அதிகாரிகளை மிரளவிட்ட நபர்…. ஏர்போர்ட்டில் பரபரப்பு…..!!!!!

சென்னை மீனம்பாக்கம் விமானம் நிலையத்தில் இருந்து நேற்று காலை 7:35 மணிக்கு துபாய் செல்வதற்காக ஒரு தனியாா் விமானம் 174 பயணிகளுடன் புறப்படத் தயாராகியது. இந்த நிலையில் எழும்பூரிலுள்ள சென்னை பெருநகர காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது பேசிய நபா் “துபாய் செல்ல இருக்கும் தனியாா்விமானத்தில் வெடிகுண்டுடன் ஒருவா் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்” என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாா். இதனைக் கேட்டு அதிா்ச்சியடைந்த காவல்துறையினர் உடனடியாக சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து விமான நிலைய பாதுகாப்புப்படையினா், வெடிகுண்டு நிபுணா்கள் விரைந்து சென்று அந்த விமானத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அத்துடன் விமானத்தில் பயணம் செய்ய இருந்த 174 பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. எனினும் வெடிகுண்டோ (அல்லது) வெடிப் பொருளோ எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இதுகுறித்து விமான நிலைய காவல்துறையினர் சைபா் குற்றப்பிரிவுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.

அவற்றில், சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் (39) என்பவா் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் என்பது தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் “ரஞ்சித்தின் தங்கை மற்றும் அவரது கணவர் துபாய் விமானத்தில் செல்ல இருந்தனா். இதற்கிடையில் அவா்களது குடும்பத்தில் பிரச்னை இருந்துள்ளது. இதனால் கோபத்திலிருந்த ரஞ்சித், அவரதுதங்கை துபாய் செல்வதைத் தடுக்க அந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் ரஞ்சித்தை கைது செய்தனா்.

Categories

Tech |