Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குடும்பத்தில் ஒருவராக நினைக்கிறோம்”- பெண் காவலருக்கு வளைகாப்பு…! காவல் நிலையத்தில் நெகிழ்ச்சி சம்பவம்…!

மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் இணைந்து பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாகா நத்தத்தில் சுகன்யா என்ற பெண் காவலர் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணி புரிகிறார். இந்நிலையில்  சுகன்யாவிற்கு அவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் இணைந்து வளைகாப்பு விழா நடத்த முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பேபி தலைமையில் அனைத்து போலீசாரும் இணைந்து காவல்நிலையத்தை ஒரு வீடு போல மாற்றினார்.

அங்கு உள்ள ஒரு அறையில் தோரணங்கள் கட்டி மற்றும் அலங்காரங்கள் செய்தனர். பின் சக ஊழியர்கள் இணைந்து சுகன்யாவிற்கு மாலை அணிவித்தும் வளையல்கள் அணிவித்தும் ஏழு வகை உணவுகளை பரிமாறியும் நலங்கு வைத்து மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சி குறித்து போலீசார் கூறும்போது காவல் பணியானது ஆண்களுக்கே மிகவும் சவாலாக உள்ள இந்த நிலையில் பெண்களும் பல விதமான சிரமங்கள் மற்றும் கடுமையான நெருக்கடிகளை கடந்து பணியாற்றி வருகின்றனர்.

மேலும் இது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்கள் தனது குடும்ப உறவுகளுடனும் எந்த ஒரு முக்கிய விழாக்களிலும் பங்கு பெறாமல் தனது கடமையை ஆற்றுகின்றனர். அதனால்தான் தங்களுடன் பணிபுரியும் சக ஊழியரை குடும்ப உறுப்பினராக நினைத்து அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தோம் என மன நிறைவுடன் தெரிவித்தனர்.

Categories

Tech |