திரிபுரா மாநிலத்தின் தலாய் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வெளியே இருந்த குழி ஒன்றில் உடல் ஒன்று கிடந்துள்ளது. இதை பார்த்த அந்த பகுதியிலுள்ள மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு வீட்டிற்கு வெளியே இருந்த அந்த குழியை சந்தேகத்தின் பெயரில் தோண்டிய போது மேலும் மூன்று உடல்கள் கிடைத்துள்ளது.
அதில் மூன்று பேர் பெண்கள், ஒருவர் ஆண் என்பது தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே குடும்பத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் இந்த நான்கு பேரையும் படுகொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சிறுவனை கைது செய்த காவல்துறையினர சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறது. இது அந்த பகுதியில் வரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.