நடிகை கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்தினருடன் டின்னர் சாப்பிடும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இவர் சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா, விஷால், தனுஷ், விக்ரம் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தினார் . தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் நடிகர் நிதினுடன் இணைந்து நடித்துள்ள ‘ரங் தே’ திரைப்படம் நேற்று வெளியானது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது படம் ரிலீசான சந்தோஷத்தில் நேற்று தனது குடும்பத்தினருடன் டின்னர் சாப்பிடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் ‘நீண்ட இடைவெளிக்குப்பின் பின் ஒரு டின்னர்’ என பதிவிட்டுள்ளார் . தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு சுமார் 3 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.