கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டனந்தல் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துணி தைக்கும் கடை வைத்து நடத்தி வந்துள்ளார் இவருக்கு திருமணமாகி மாலதி என்ற மனைவியும் ராஜதுரை என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரவிச்சந்திரன் ஒரு கோவிலின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது ரவிச்சந்திரனை அவருடைய மனைவி, மகன் உள்ளிட்ட 3 பேர் இணைந்து கட்டையால் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து கடந்த 2019-ம் ஆண்டு சின்னசேலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாலதி, ராஜேந்திரன், சுப்பிரமணியன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த கொலை குற்றத்தை விசாரித்த நீதிபதி மாலதி, ராஜேந்திரன் மற்றும் சுப்பிரமணியன் உள்ளிட்ட மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் 11,500 ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.