நடிகை வனிதா பீட்டர் பாலை அடித்து விரட்டிவிட்டதாக தகவல் தெரியவந்துள்ளது;
நடிகை வனிதா விஜயகுமார் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது மற்றும் பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்து கொண்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
தற்போது தனது பிறந்த நாளை கொண்டாட வனிதா குடும்பத்தினருடன் கோவா சென்றுள்ளார். அங்கு இருவரும் ஜோடியாக எடுக்கபட்ட புகைப்படங்களை அவரது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அப்போது கோவாவில் பீட்டர் பால் குடிபோதையில் வனிதாவிடம் வம்பு செய்ததாக கூறப்படுகின்றது. தொடக்கத்தில் பொறுத்துபோன வனிதா ஒரு கட்டத்தில் கோபமாகி பீட்டர் பாலை அடித்து வெளுத்து- விட்டதாக கூறப்படுகின்றது. இது வெறும் பரபரப்புக்காக கூறப்பட்ட தகவலாக இருக்கும் என ரசிகர்கள் கிண்டலடித்து கொண்ட நிலையில் இது அனைத்தும் உண்மை தான் என தயாரிப்பாளர் ரவீந்தர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பீட்டர்பால்- வனிதா பிரிவு குறித்து பதிவிட்டதாவது; ஆமா உறுதி செய்யப்பட்டுவிட்டது. அனைவரின் பேச்சும் உண்மை ஆகிவிட்டது. பீட்டர்பால் வீட்டில் இருந்து துரத்தி விடப்பட்டார் என குறிப்பிட்டுள்ளார்.