Categories
உலக செய்திகள்

குடியுரிமை பெறவிரும்புவோருக்கு…. ஒரு மகிழ்ச்சி செய்தி…. பைடன் அதிரடி அறிவிப்பு…!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த 2008ம் ஆண்டு இருந்த குடியுரிமை முறையை பின்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் வேலையின் காரணமாக பெரும்பாலான அயல்நாட்டவர்கள் அந்நாட்டின்  குடியுரிமை பெறுகின்றனர். இந்த குடியுரிமை பெறுவதில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் இருக்கின்றனர்.மேலும் அந்நாட்டு குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்களுக்கு குடியுரிமை தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் அதிக அளவு அயல்நாட்டவர்கள் குடியேறுவதை குறைப்பதற்காக அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் இத்தேர்வில் சில மாற்றங்களை கொண்டு வந்தார்.

அதனடிப்படையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடியுரிமை தேர்வுகளில் இடம்பெற்றிருந்ததை 100 வினாக்களை 128 வினாக்களாக மாற்றியமைத்து தேர்வை கடினமாக்கியுள்ளார். மேலும் இந்த விதிமுறைகள் டிசம்பர் 1 2020 க்கு பிறகு குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கும் பொருந்தும் என ட்ரம்ப்  அறிவித்தார்.

இதனை அடுத்து அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன், முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை தேர்வுமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார். அதன்படி 2008 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்வு முறைகளே மீண்டும் தொடரும் இம்முறை மார்ச் 1-ஆம் தேதி  முதல் அமலுக்கு வரும் என ஜோ பைடென் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |