குடியிருப்புக்குள் புகுந்து பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை கரடி சேதம் செய்வதால் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் உபதமலை பகுதியில் விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் பால் மாற்றம் தயிர் பாக்கெட்கள் சரக்கு வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதிக்கு உணவு தேடி வந்த கரடி பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை ருசித்தது.
இது அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கின்றது. சென்ற சில நாட்களாகவே குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இதனால் பொதுமக்கள், அங்கு சுற்றி தெரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.