குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்ச்சியான அலங்கார அணிவகுப்பு ஊர்தி டெல்லியில் உள்ள ராஜபாதையில் நடைபெற்றது.
ஓவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடபட்டு வருகிறது .இதில் இந்த ஆண்டு நடைபெற்ற கொண்டாட்டத்தில் ஒரு நிகழ்ச்சியாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அலங்கார அணிவகுப்பு ஊர்தி டெல்லியில் உள்ள ராஜபாதையில் நடைபெற்றது. இந்த அலங்கார அணிவகுப்பில் மராட்டியம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநில வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,உத்திர பிரதேச மாநில அலங்கார வாகனம் ராமர் கோவில் மாதிரி போல அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த அணிவகுப்பில் 25 ஊர்திகள் இடம்பெற்ற நிலையில், மத்திய அரசின் முக்கிய துறைகளை சார்ந்த 13 அலங்கார ஊர்திகளும் ,மாநில அரசின் 12 அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றது.
இதில் உத்திரபிரதேசத்தின் ஊர்தி முதல் பரிசை தட்டிச் சென்றது. மேலும் கர்நாடக ஊர்தி இரண்டாவதும், மேகாலயா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. அதிலும் குறிப்பாக மக்களின் மனம் கவர்ந்த ஊர்தியாக மராட்டியம் ஊர்தி தேர்வுசெய்யப்பட்டுள்ளது.