Categories
Uncategorized

குடியரசு தினத்திற்கும் – சுதந்திர தினத்திற்கும்… என்ன வித்தியாசம்..?

ஜனவரி 26ஆம் நாள் குடியரசு தினத்தை கொண்டாடும் நிலையில் , குடியரசு தினத்திற்கும் , சுதந்திர தினத்திற்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்து பார்க்கலாம்.

நாளை நாம்  குடியரசு தினத்தை கொண்டாட ஆயத்தமாகி வருகிறோம், நாடே ஆயத்தமாகி வருகிறது.குடியரசு தினத்திற்கும், சுதந்திர தினத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால் சுதந்திர தினம் தான் முதலில் வந்தது. ஆகஸ்ட் 15, 1947 இல் வந்தது தான் சுதந்திர தினம் . ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் விடுதலை அடைந்தோம், ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் சுதந்திரம் பெற்றோம்  அதை தான் நாம் சுதந்திர தினமாக கொண்டாடுகிறோம்.

1947ல் ஆகஸ்ட் 15ல்  ஒன்றாக இருந்த நாடு இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிந்தது. இது ஒரு பக்கம் இருக்கும் பொழுது மூன்று வருடங்கள் பிறகு நமக்கென நாம் சட்டத்திட்டம் , அமைத்துக் கொண்டோம். நமக்கென நாம் ஒரு தாய் வேகத்தை கொடுத்துக் கொண்டோம். இந்திய அரசியல் சாசனம் புத்தகம் அமலுக்கு வந்த தினம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி தான் நாம் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.

நம் அரசியல் சாசனத்தின் படி இனிமேல் அரசன் , அரசி எல்லாம் கிடையாது. குடிகளே அரசு, குடிமக்களே அரசு , குடிமக்களான அரசு, குடியரசு தினம் என்ற சட்ட திட்டங்களை வகுத்த அரசியல் சாசனம் 1950 அமலுக்கு வந்தது. அதை தான் நாம் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த இரண்டு தினங்களிலும் யாரு ஹீரோ அப்படின்னு ஒரு கேள்வி எழலாம். யாரு கொடியேற்றுவார்கள். சுதந்திர தினத்தை பொறுத்தவரை பிரதமர் தான் ஹீரோ , டெல்லியில் பிரதமர்.

மாநிலங்களை பொறுத்தவரை பிரதமருடைய பிரதிநிதிகள் மாதிரி செயல்படுகின்ற முதலமைச்சர்கள் தான் கொடி ஏற்றுவார்கள் சுதந்திர தினத்தன்று. குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவர் கொடி ஏற்றுவார். குடியரசுத் தலைவர், ஜனாதிபதி இந்தியாவின் முதல் குடிமகன் என்று எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கலாம். அவர்தான் கொடியேற்றுவார்  டெல்லியில்.

மாநிலங்களில் அவர்களுடைய பிரதிநிதிகளை போல் செயல்படும் ஆளுநர்கள் கொடி ஏற்றுவார்கள். டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று பிரதமர் கொடியேற்றுவார். இது பாரம்பரியமாக  நாம் செய்த ஒன்று . இந்தியாவின் முதல்  பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் செங்கோட்டையில் கொடி ஏற்றினார். முதல் சுதந்திர தினத்தன்று தொடங்கிய  அந்த பாரம்பரியத்தை இன்று வரையிலும் பிரதமர் நரேந்திரமோடி வரை அதை  பின்பற்றி வருகிறார்கள்.

அதே போல குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவர்கள் இருக்கக்கூடிய இல்லம் இருக்க கூடிய அந்த வீதிக்கு பெயர் ராஜவீதி . டெல்லியில் ரொம்ப பெரியதாக  இருக்கும் . அந்த ராஜ வீதியில் தான் கொடி ஏற்றப்படும். அது மட்டுமில்லாமல் சுதந்திர தினத்தன்று பிரம்மாண்டமான அணிவகுப்பு எல்லாம் இருக்காது , ரொம்ப எளிமையான அணிவகுப்பு தான் இருக்கும். குடியரசு தினத்தன்று பிரம்மாண்டமான  அணிவகுப்புகள் இருக்கும்.

சுதந்திர தினத்தன்று நாம் பழம்பெருமைகளையும்  பேசிக்கொண்டிருப்போம். நமக்கு யாரெல்லாம் சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள் , உதவிகள் செய்தார்கள், யாரெல்லாம் இரத்தம் சிந்தினார்கள் என்று நினைவு கூர்வோம். குடியரசு தினத்தன்று நம் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று  நாம் பேச ஆரம்பித்து விடுவோம். இதுதான் சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் உள்ள பிரதான வித்தியாசம் ஆகும். அனைவருக்கும் இனிய குடியரசுதின வாழ்த்துக்கள்

Categories

Tech |