குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று (6ஆம் தேதி) நடைபெறுகிறது.
குடியரசு துணைத் தலைவருக்கான பதவிக்காலம் இம்மாதம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 18ஆம் தேதி பிரதமர் மோடியின் முன்னிலையில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரான ஜெகதீப் தங்கர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதேபோல எதிர்க்கட்சியின் சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலம் முன்னாள் ஆளுநரான மார்கரெட் ஆல்வா போட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளரான மார்கரெட் ஆல்வா கடந்த 19ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்நிலையில் தான் இன்று (6ஆம் தேதி) குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் நடக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த குடியரசு தலைவருக்கான தேர்தலில் திரௌபதி முர்மு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.