Categories
தேசிய செய்திகள்

குடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். அவர்கள் முதலில் ஆமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று, பின் அங்கு மொடேரா அரங்கத்தில் நடைபெற்ற `நமஸ்தே டிரம்ப்` நிகழ்ச்சியில் உரையாற்றியபின் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டனர்.

இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர்.

அதிபர் டிரம்ப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் டிரம்ப். இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |