குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்த நாளுக்கு தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது 75 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளையொட்டி பல்வேறு தலைவர்களும் தங்கள் வாழ்த்துச் செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.அவ்வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மலர்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நாட்டிற்கு மேலும் நீங்கள் சேவையாற்ற வேண்டும் என நான் பிரார்த்தனை செய்கிறேன்.தங்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் கூறியுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாளுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதில் அவர் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து நாட்டிற்கு சேவை செய்ய இறைவனை பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
My heartfelt wishes to our Hon'ble President Shri.Ram Nath Kovind @rashtrapatibhvn ji on his birthday. I pray the Almighty to bless him with good health, peace and happiness to continue his valuable selfless service to the nation and its people. pic.twitter.com/2MCFHiR8wj
— O Panneerselvam (@OfficeOfOPS) October 1, 2020