கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்ற 10½ டன் ரேஷன் அரிசியை குடிமைபொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புனனாய்வு இன்ஸ்பெக்டர் ஆல்பின்மேரி தலைமையில் காவல்துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்போது லாரியில் சுமார் 10½ டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்துள்ளது. மேலும் இந்த அரிசி கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லாரி டிரைவரான நெல்லையை சேர்ந்த ஜெபசிங் என்பவரை கைது செய்து ரேஷன் அரிசியை லாரியோடு பறிமுதல் செய்துள்ளனர்.