பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கொரோனா தீவிரமடைந்து வருவதால் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வெளி நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் பிரிட்டன் குடிமக்களாகவே இருந்தாலும் பிற நாடுகளை விட்டு வெளியேறுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து அதில் நெகட்டிவ் என்ற முடிவு வந்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இது முதன் முதலாக இங்கிலாந்தில் அடுத்த வார துவக்கத்திலிருந்து நடைமுறைப்படுத்தவுள்ளது. இதனை தொடர்ந்து ஸ்கேட்லாந்திலும் கூடிய சீக்கிரம் இந்த விதிமுறையை செயல்படுத்தவுள்ளார்கள்.
இதேபோன்று வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து போன்ற பகுதிகளில் இந்த கட்டுப்பாடு செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த நடவடிக்கையால் பிரிட்டனில் அதிகப்படியாக பரவிவரும் கொரோனா வைரஸ் பரவலை குறைக்க முடியும் என்று நம்புவதாக கூறியுள்ளனர். மேலும் பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 52, 618 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 1,162 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.