அரக்கோணம் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், அரக்கோணத்தில் நடந்த இரண்டு படுகொலை என்பது, குடிபோதையில் இருதரப்பும் மோதிக் கொண்டதன் விளைவாக நடந்த சம்பவம் என்று சொல்வதை போல, பச்சை அயோக்கியத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.
கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் இரண்டு குடும்பத்தை சார்ந்தவர்களையும் சந்தித்து பேசினேன். இரண்டு பேருக்கும் எந்த குடிப் பழக்கமும் கிடையாது, போதை பழக்கமும் கிடையாது, அந்த பழக்கமே கிடையாது. ரொம்ப இயல்பாக பேசுவார்கள். ஒரு வம்பு தும்புக்கும் போனது இல்லை. ஒரு அரசியல் நடவடிக்கையில் போய் ஈடுபட்டது இல்லை. இந்த தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரித்து அதை தவிர…
நான் அந்த இளைஞர்கள் எங்கள் கட்சியை சார்ந்தவர் என்று உரிமை கோரவில்லை. மேலப்பாளையம் முருகேசன் திமுக உறுப்பினர். அவர் திமுககாரர் என்று விடுதலை சிறுத்தைகள் விலகி போகவில்லை. பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் மேலப்பாளையம் முருகேசனுக்குகாக தமிழ்நாடு கொந்தளிக்க கூடிய இயக்கத்தை 1997இல் விடுதலை சிறுத்தைகள் முன்னெடுத்தது.
சென்னை மாநகரமே அன்றைக்கு திணறி போனது. அப்போது வெளிவந்த நாளிதழ்களை எடுத்து பாருங்கள். விடுதலைச்சிறுத்தைகளின் பேரணி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று உங்களுக்கு தெரியும். மதுரையில் மேலப்பாளையத்தில் நடந்த படுகொலைக்கு சென்னையில் பல்லாயிரக்கணக்கான சிறுத்தைகளை திரட்டி, மாபெரும் பேரணி நடத்தி, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இயக்கம் விடுதலை சிறுத்தை கட்சி என திருமாவளவன் கூறினார்.