காஞ்சிபுரத்தில் குடிபோதையில் வம்பிழுத்த நபரை சிறுவன் கட்டையால் தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லியில் நாராயணன் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் அங்கு நின்று கொண்டிருந்த 17 வயது சிறுவனிடம் வம்பிழுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் அருகிலிருந்த கட்டையை எடுத்து நாராயணின் மண்டையில் பலமாகத் தாக்கி மண்டையை உடைத்துள்ளார்.
இச்சூழலில் மயங்கி விழுந்த நாராயணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . இச்சம்பவத்தினை அறிந்த காவல்துறையினர் சிறுவனின் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர் . இந்நிலையில் நாராயணன் சிகிச்சை பலனின்றி இறந்ததால் காவலர்கள் சிறுவனின் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.