குடிபோதையில் தகராறு செய்த மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் பகுதியில் சென்னகரம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரன். இவருடைய மகன் ராஜமாணிக்கம் வயது(31). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ராஜமாணிக்கம் தினந்தோறும் மது அருந்திவிட்டு சண்டை போட்டதால் ராஜமாணிக்கமும் அவர் மனைவியும் பிரிந்து வாழ்கிறார்.
இந்நிலையில் ராஜமாணிக்கம் தன் தந்தையிடம் தினந்தோறும் மதுபோதையில் தகராறு செய்து வந்தார்.இதனால் கோபமடைந்த சந்திரன் கிராமச் கூட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த ராஜமாணிக்கத்தின் தலையில் கல்லை தூக்கிப் போட்டார். இதைப்பார்த்த அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் கிடந்த ராஜமாணிக்கத்தை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் பாதையிலேயே ராஜமாணிக்கம் பரிதாபமாக இறந்தார்.
இதைத்தொடர்ந்து சந்திரன் மேலவளவு காவல் நிலையத்தில் தன் மகன் ராஜமாணிக்கத்தை தான் கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்து சரணடைந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.