Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குடிபோதையில் செய்த ரகளை…. பெண் போலீசுக்கு கொலை மிரட்டல்…. வாலிபர் கைது….!!

மது அருந்திவிட்டு பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள சோதனை சாவடியில் பெண் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக ஹெல்மெட் மற்றும் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ரத்தினகுமார் என்பது தெரியவந்துள்ளது.

இதனைதொடர்ந்து அவர் மதுபோதையில் இருப்பதை அறிந்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி கொண்டிருந்த போது திடீரென அந்த வாலிபர் அங்கிருந்த பெண் போலீசை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் ரத்தினகுமார் மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |