Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடிநீர் பஞ்சம் – 8 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம்

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுவதாக பொதுமக்கள்     குற்றம்சாட்டியுள்ளனர்.

 

கம்பம் நகராட்சியின் இருபத்தி எட்டாவது வார்டு பகுதியில் 8 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது அதுவும் சுத்திகரிக்கப்படாமல் விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் இருப்பதால் குடிப்பதற்கு கூட பயன்படுத்த முடிவதில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் எந்தவித உதவியும் வழங்கப்படாததால் பட்டினியால் தவிப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர் இது குறித்து கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Categories

Tech |