பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல கிருஷ்ணன் புதூர் பகுதியில் கூட்டுக் குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இந்த குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் பேரின்ப விஜயகுமார் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்தார். ஆனால் குழாயில் மறுபடியும் உடைப்பு ஏற்பட்டு ஆபத்தான பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரின் தலைமையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் குடிநீர் குழாயை சரியாக சரி செய்யாத பணியாளர்களை கண்டித்து போராட்டம் நடத்தினார்.
இதனால் கூட்டு குடிநீர் குழாய் பணியாளர்கள் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து தற்காலிகமாக பணியை மேற்கொள்வதாக கூறினார். ஆனால் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து வாக்குறுதி தரும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிட போவதில்லை எனக் கூறிவிட்டனர். இதன் காரணமாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தை ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் குடிநீர் குழாயை சீரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.