Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடிநீர் இல்லாமல் அவதி… நகராட்சி அலுவலகம் முற்றுகை… ஆணையரின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் விநியோகம் செய்யாததால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் உள்ள மக்களுக்கு லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு லோயர்கேம்ப் நீரேற்று நிலையத்தில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள 2 ஆழ்துளை குழாய்களின் மின் மோட்டர்களும் பழுதடைந்த நிலையில் வார்டில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த 3 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை உடனடியாக சீர் செய்து குடிநீர் விநியோகம் செய்யவேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் சேகர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது லோயர்கேம்பில் உள்ள டிரான்ஸ்பார்மர் சீரமைக்கும் பணிகளை மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், இன்னும் 2 நாட்களில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என கூறியுள்ளார். இதற்கு பின்னரே அப்பகுதி பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |