Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டுநர் அட்டுழியம்…. பயங்கர விபத்தில் 3 பேர் படுகாயம்…. கோவையில் பரபரப்பு….!!!

பயங்கர விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் பகுதியில் ஒரு ஆட்டோ வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த ஆட்டோவை மோகன்ராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது திடீரென அவ்வழியாக சென்ற மாணவி உட்பட 3 பேரின் மீது ஆட்டோ பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் இருந்த சாக்கடைக்குள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் டிரைவரும் தன்னுடைய ஆட்டோவுடன் சாக்கடைக்குள் விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக துடியலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில்  குடி போதையில் ஆட்டோவை ஓட்டியது தெரியவந்தது. மேலும் மோகன்ராஜ் மது பரிசோதனைக்கு மறுத்து காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் காவல்துறையினர் ஓட்டுனரை மது பரிசோதனை செய்தனர். மேலும் காவல்துறையினர் மோகன் ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |