Categories
மாநில செய்திகள்

குடிகாரர்கள் தானே…! ஏன் அப்படி செய்யல ? போதையிலும் கரெக்ட்டா செய்யுறாங்க…. திருமா ஆவேசம் …!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், அரக்கோணம் இரட்டைக் கொலை ஏன் நடந்தது. ஊடகங்களில் திசை திருப்புகிறார்கள், அவதூறு பரப்புகிறார்கள். சில தலித் இயக்கங்களும் கூட தவறான கருத்துக்களை முன் மொழிகிறார்கள். எப்பொழுதுமே அடிப்படை பிரச்சனை என்ன ? என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்,  முதன்மை பிரச்சினை என்ன ? என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

சமூகத்தில் ஏற்கனவே இருக்கக்கூடிய அடிப்படையான பிரச்சினை  சாதிய  வேறுபாடுகள், சாதியை முரண் பாடுகள், அது இருந்து கொண்டே இருக்கிறது. நீ பிறப்பதற்கு முன்னாடி… நான் பிறப்பதற்கு முன்னாடி… சாதி வெறியர் பிறப்பதற்கு முன்னாடி…. பாதிக்கப்படுபவர்கள் பிறப்பதற்கு முன்னாடி… இந்த சமூகத்தில் ஜாதி பிரசாரணை ஏற்கனவே இருக்கிறது, அது அடிப்படை பிரச்சனை.

ஆனால் திடீரென்று ஒரு மோதல் நடக்கின்ற போது அதற்கு காரணம் எதுவாகவும் இருக்கலாம் ? தலித் செயல்கள் கூட முதலில் பிரச்சினையை தூண்டி இருக்கலாம், வம்பு இழுத்து இருக்கலாம். ஆனால் அதுதான் அங்கு குற்றச் செயலுக்கு காரணம் என்று சொல்லமுடியாது,  அடிப்படை பிரச்சினையில் சேர்த்து பார்க்க வேண்டும். ஏற்கனவே இங்கு சாதியை முரண்பாடுகள் இருக்கின்றன, சாதி வெறுப்பு இருக்கிறது,

தலித்துகள் என்கிற ஒரு வெறுப்பு அரசியல் இங்கு விதைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலமாக தான் இரண்டு தரப்பில் ஏற்படக்கூடிய வாக்குவாதம் கூட கொலையில் போய் முடிகிறது. குடிகாரர்கள் மோதிக்கொண்டால் என்றால், சாதிவெறியர்களே 20 பேர் குடித்துக்கொண்டு வந்தார்களே, அந்த 20 பேர் குள்ளே மோதிக் கொண்டார்களா… அவர்களெல்லாம் குடிகாரர்கள் ஆகிவிட்டார்.

அந்த 20 பேரும் குடிகாரர்கள் தான் அல்லது போதையில் உள்ளவர்கள்தான். ஏன் ஒரே சாதிக்குள்ளேயே அவர்கள் குடிபோதையில் இருந்தாலும்கூட மறந்தும் கத்தியால் குத்திக் கொல்ல வில்லை, படுகொலை செய்யவில்லை, தலித் என்பவனை சரியாக அடையாளம் கண்டு தானே  போதையில் இருப்பவன் கூட குத்துகிறான் என திருமாவளவன் வேதனை தெரிவித்தார்.

Categories

Tech |