Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குடல் புண்களை குணப்படுத்தும்…வெந்தய கீரை…!!

வெந்தயக்கீரையின் மருத்துவ குணங்கள் பற்றி காணலாம்: 

வெந்தய கீரை சாப்பிடுவதால், நாக்கின்  வறட்சியைப் போக்கி தாகத்தை தணிக்கிறது.  செரிமான பிரச்னையில் இருந்து விடுபட உதவுகிறது.பசியை தூண்டுகிறது.

மந்தபுத்தி, சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக செயல்பட வெந்தய கீரை முற்றிலும் உதவுகிறது. கண் பார்வை தெளிவடையச் செய்கிறது. இடுப்பில் தோன்றும் தண்டுவட வலி பிடிப்பை குணப்படுத்துகிறது.

வாதநோய், மேகநோய், மாதவிடாய் கோளாறுகள், மூல நோய்களை குணப்படுத்தி நற்பலன்களை அளிக்கிறது.

உள், வெளி ரணங்களை ஆற்றும் சக்தி வெந்தய கீரையில் இருக்கிறது. உடல் மெலிவுற்றவர்கள் தொடர்ந்து இதை பயன்படுத்தி வருவதால் உடல் எடை அதிகரித்து அழகான தோற்றத்தை அளிக்கும்.

வெந்தய கீரை சாப்பிடுவதால், சொறி, சிரங்கு, மலச்சிக்கல் தீரும். குடற்புண்கள் எளிதில் குணமாகும். கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும். தலைசுற்றல், பித்த மயக்கம் தீரும். காச நோய் குணமாகி உடல் பலப்பட்டு திட்டமாகும்.

Categories

Tech |