Categories
தேசிய செய்திகள்

குஜராத் பாலம் சரிந்து விழுந்தது எப்படி…? 141 பேர் பலி… நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!!!!

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே சுமார் நூறு வருடங்கள் பழமையான தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அந்த பாலத்தில் மறுசீரமைப்பு பணி நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அந்த பணி முடிவடைந்து ஐந்து தினங்களுக்கு முன்பாக மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று இரவு சத் பூஜைக்காக ஏராளமான அந்த பாலத்தின் மீது குவிந்துள்ளனர். அப்போது அவர்களின் எடையை தாங்காமல் பாலம் திடீரென அறுந்து விழுந்துள்ளது. இதனை அடுத்து பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்துள்ளனர்.

இந்த நிலையில் தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த விபத்து பற்றி பல்வேறு புது புது தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த பாலம் அருந்து விழுந்தது தொடர்பாக நேரில் பார்த்த விஜய் கோஸ்வாமி என்பவர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அகமதாபாத் சேர்ந்த அவர் பேசியபோது நேற்று பிற்பகலில் எனது குடும்பத்தினருடன் மற்ற ஆற்றின் குறுக்கே தொங்கு பாலத்திற்கு சென்றேன். ஆனால் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது இளைஞர்கள் சிலர் வேண்டுமென்று பாலத்தை பிடித்து இழுத்து அசைத்தனர்.

இதனால் பாலத்தில் நடந்து செல்ல மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் விபரீதம் எதுவும் நேர்ந்துவிடும் என்று அச்சத்தில் நான் எனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு பாலத்தின் பாதி வழி இல்லையே வீடு திரும்பி விட்டேன் ஆனால் நான் பயந்தது போலவே பெரும் விபத்து நடைபெற்று உள்ளது. இந்த விபத்திற்கு முன்பாக இது பற்றி நான் அதிகாரிகளிடம் பேசினேன். ஆனால் அவர்கள் நான் கூறிய தகவலை கேட்காமல் டிக்கெட் விற்பதில் மற்றும் குறியாக இருந்தார்கள் எனது பேச்சை அலட்சியம் செய்து உள்ளனர் என கூறியுள்ளார். மேலும் பாலத்தின் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு நான் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை நான் பாலத்தில் இருந்து திரும்பிய சில மணி நேரத்தில் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |