பிரதமர் மோடி மக்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளை கொண்டுள்ளது. இங்கு முதற்கட்டமாக கடந்த 1-ஆம் தேதி 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அதேபோல் தற்போது மீதமுள்ள 92 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி ஆமதாபாத்தில் உள்ள நிஷான் பள்ளியில் தனது வாக்கை அளித்தார்.
மேலும் இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில் “நமது மாநிலத்தில் 2-வது கட்டமாக நடைபெறும் தேர்தலில் அதிக அளவில் இளம் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் உள்ளனர். மேலும் நமது நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடைத்தேர்தல்களும் நடைபெற்று வருகிறது. எனவே மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் “என அவர் கூறியுள்ளார்.