Categories
தேசிய செய்திகள்

“குஜராத் சட்டசபை தேர்தல்”…. நான் வெற்றியடைய செய்வேன்…. அரவிந்த் கெஜ்ரிவால்…..!!!!!

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தலானது இந்த வருடம் இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அடைந்த அபார வெற்றியைத் அடுத்து டெல்லி முதல் மந்திரியும், ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் மாநிலத்தில் வரவுள்ள தேர்தலில் எங்களுக்கு ஒருவாய்ப்பு வழங்குமாறு மக்களிடம் அவர் கேட்டு கொண்டார். அதுமட்டுமல்லாமல் தன் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் குஜராத்தில் நிலவும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று தெரிவித்தார். மேலும்அகமதாபாத் திரங்கா யாத்திரையின் போது அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அதாவது “எனக்கு அரசியல் செய்யத்தெரியாது.

எனினும் ஊழலை எப்படி ஒழிப்பது என தெரியும். தற்போது டெல்லியில் ஊழலை ஒழித்து விட்டோம். ஆகவே நீங்கள் டெல்லியிலுள்ள எந்த அலுவலகத்திற்கு சென்றாலும் லஞ்சம் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அதேபோன்று பஞ்சாப்பில் பகவந்த் மான் ஆட்சிக்கு வந்து 10 தினங்களிலேயே ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டார். நீங்கள் நம்பவில்லையெனில் பஞ்சாபிலுள்ள உங்கள் நண்பர்களிடம் கேட்டு பாருங்கள்.

பஞ்சாப்பில் தாசில்தார் அலுவலகம் ஆகிய அரசு அலுவலகங்களில் அனைத்து வேலைகளும் 10 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும். இதற்கிடையில் இன்று நான் எக்கட்சியையும் விமர்சிக்க வரவில்லை. மேலும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை  தோற்கடிக்க வரவில்லை. நான் குஜராத் மக்களையும் வெற்றி பெறச் செய்யவே வந்து இருக்கிறேன். டெல்லி மக்கள் பஞ்சாப் மக்கள் செய்ததுபோல ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். எங்களின் ஐந்து ஆண்டு காலப் பணி உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் நீங்கள் மறுபடியும் இவர்களை ஆட்சிக்குக் கொண்டு வரலாம்” என்று தெரிவித்தார்.

Categories

Tech |