Categories
தேசிய செய்திகள்

குஜராத் கலவரம்: மோடி மீது வழக்கு தொடர்ந்தவர் கைது…. வெளியான அறிவிப்பு….!!!!!

மகாராஷ்டிராவில் சமூகஆா்வலா் தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவு காவல்துறையினா் கைது செய்தனா்.

குஜராத் மாநிலம் கோத்ராவில் நடந்த கலவரம் குறித்த வழக்கில் பிரதமர் நரேந்திரமோடி உட்பட 64 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இதையடுத்து தீஸ்தா சீதல்வாட், முன்னாள் டிஜிபி ஆர்.பி. ஸ்ரீகுமார் போன்றோர் கைது செய்யப்பட்டனர். சென்ற 2002ஆம் வருடம் குஜராத் மாநிலம் கோத்ராவில் கலவரம் நடைபெற்றது.

அது குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரதமர் மோடி (அப்போதைய குஜராத் முதல்வர்) உட்பட 64 பேர் விடுவிக்கப்பட்டனர். அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜாகியா ஜாஃப்ரி என்பவர் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இதில் ஜாகியா ஜாஃப்ரியை சமூகஆர்வலர் தீஸ்தா சீதல்வாட்டின் தன்னார்வ அமைப்பு ஆதரித்ததாகக் கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் சான்டா க்ரூஸ் பகுதியில் வசித்து வந்த தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கலவரம் குறித்து பொய்யான ஆதாரங்களை சிறப்புப் புலனாய்வுக்குழு மற்றும் விசாரணை ஆணையத்திடம் தீஸ்தா சீதல்வாட் வழங்கியதாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் போலீஸ் நிலையத்தில் டி.பி. பராட் என்ற குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் புகார் அளித்தார். அந்தப் புகாரின்படி தீஸ்தா சீதல்வாட் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |