Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் ராஜ்கோட் விமான நிலையம்… ஆகஸ்ட் முதல்… வெளியான தகவல்…!!!!

குஜராத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டு டிசம்பரில் குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் கடந்த 1995 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பாஜக உள்ளது. மேலும் ஆறாவது முறையாக ஆட்சியை பிடித்து விடும் முனைப்பில் அக்கட்சி இருக்கிறது. இந்த நிலையில் தொழில் நகரமான ராஜ்கோட்டில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரூபாய் 1,405 கோடி மதிப்பில் கட்டப்படும் இந்த விமான நிலையத்திற்கு கடந்த 2018ஆம் ஆண்டு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக  பிரதமர் மோடி கடந்த 2017 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டியுள்ளார். 1,032 ஹெக்டேர் பரப்பளவில் நான்கு கட்டங்களாக கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மொத்தம் 14 நிறுத்தும் இடங்களுடன் 23 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு பயணிகளுக்கான முனையம் அமைக்கப்படும். குஜராத் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டில் நடைபெற உள்ள சூழ்நிலையில் இந்த புதிய ஹிராசர் விமான நிலையம் அல்லது அல்லது ராஜ்கோட் சர்வதேச விமான நிலையம் ஆகஸ்டில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பெரிய வளர்ச்சிக்கான திட்டம் செயல்பாட்டிற்கு வருவது குஜராத்தில் தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்கும் வகையில் அமையும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |