Categories
தேசிய செய்திகள்

. குஜராத்தில் சோகம்…! குழந்தைகள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் பலி…. நிவாரணம் அறிவிப்பு… மேலும் உயர வாய்ப்பு..!!

குஜராத்தில் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் மோர்பியில் சத்பூஜைக்காக சென்றபோது கேபிள் பாலம் திடீரென அறுந்து விழுந்ததில் முதற் கட்டமாக 32 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது 60க்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகியுள்ளதாக அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்துள்ளார். மேலும் பாலத்தில் 500 பேர் இருந்ததாகவும், ஆற்றுக்குள் 400 க்கும் மேற்பட்டோர் விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பலி எண்ணிக்கை உயரலாம்.. ஆற்றில் விழுந்த பலரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மோர்பியில் இடிந்து விழுந்த பாலம் புனரமைப்பு பணிகள் முடிந்து கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது.

இதற்கிடையே மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த குடிமக்களின் குடும்பங்களுக்கு  இரங்கலைத் தெரிவித்த அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் மாநில அரசு வழங்கும் என அறிவித்துள்ளார்..

அதேபோல பிரதமர் மோடியும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து மீட்பு பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் மத்திய அரசு சார்பாக விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் PMNRF இலிருந்து 2 லட்சம் ரூபாய். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் மற்றும் மாநில அரசு சார்பில் பலியானோருக்கு 4 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும்  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

குஜராத்தில் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்தற்கு காரணம் தீபாவளி விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களைக் கருத்தில் கொண்டு ஏராளமானோர் இங்கு வந்தனர்; இது சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இடம். பாலத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம். அது இடிந்து விழுந்தபோது, ​​மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர் என்று நேரில் பார்த்த சாட்சிகள் கூறுகிறார்கள்..

ராஜ்கோட் பாஜக எம்.பி.  மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியா கூறியதாவது, குஜராத்தில் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்தது 60 க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, அவற்றில் அதிகமான குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள். மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்; NDRF மீட்பு பணி நடந்து வருகிறது. இந்த விஷயத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், இது மிகவும் வருத்தமளிக்கிறது என்றார்.

Categories

Tech |