கோவையில் மர்ம நபர்கள் சிலர் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர்.
கோவையை அடுத்த வெள்ளலூர் பஸ் நிலையம் அருகே தந்தை பெரியாரின் உருவச் சிலை உள்ளது. இந்த சிலைக்கு இன்று காலையில் மர்மநபர்கள் செருப்பு மாலை அணிவித்தும் தலை பகுதியில் குங்குமத்தை தூவிவிட்டும் அவமரியாதை செய்ததுள்ளனர்.
இதைப் பார்த்ததும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.
மேலும் அந்த சிலை அருகே பெரியாரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.