நடிகை அனுயா குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தாலும் செல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கும் கோமாளிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பலருக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து நடைபெறும் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போட்டியாளர்களுக்கும் கோமாளிகளும் மிகப்பெரிய அளவில் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகை அனுயா குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தாலும் செல்ல மாட்டேன் எனக் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் ‘சிவா மனசுல சக்தி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுயா . இதைத்தொடர்ந்து இவர் மதுரைசம்பவம், நகரம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.
மேலும் இவர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நண்பன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் . சமீபத்தில் அனுயா அளித்த பேட்டியில் ‘குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சிக்கு வாய்ப்பு கிடைத்தாலும் நான் சொல்ல மாட்டேன் . அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமானால் தமிழில் பேசத் தெரிய வேண்டும் . நன்றாக தமிழில் ஜோக் சொல்ல வேண்டும் . எனக்கு தமிழ் சரியாக தெரியாது என்பதால் அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள மாட்டேன்’ எனக் கூறியுள்ளார். அனுயா பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.