Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்… வெளியான செம மாஸ் தகவல்…!!!

குக் வித் கோமாளி சீசன் 2 கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் கனி டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . ஷகிலா, அஸ்வின் இருவரும் மூன்றாவது, நான்காவது இடத்தை பிடித்தனர் .

இதையடுத்து குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 2 கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |