Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி முடிந்தது… சிவாங்கி நீ கேட்ட கேள்விக்கு இது தான் பதில்… அஸ்வின் வெளியிட்ட உருக்கமான பதிவு…!!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களும் கோமாளிகளும் இணைந்து செய்யும் காமெடிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக அஸ்வின்-சிவாங்கி இருவரும் செய்யும் கியூட் ரகளைகள் ரசிக்கும் வகையில் இருக்கும். இந்நிலையில் அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘இது குக் வித் கோமாளி அல்ல குக் வித் ஃபேமிலி. இந்த பயணம் எனக்கு மிகவும் சிறப்பானது .

Shivangi (Super Singer) Wiki, Biography, Age, Songs, Images & More -  wikimylinks

இந்த நிகழ்ச்சி முடிவடைந்து விட்டது என நான் நினைக்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் நான் எல்லா பணிகளையும் விட்டுவிட்டு இந்த அணியுடன் ஒரு நிமிடமாவது செலவிட வருவேன்’ என பதிவிட்டுள்ளார். மேலும் அவர் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் குறித்து பெருமையாக பதிவிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக சிவாங்கிக்கு ஸ்பெஷல் நன்றிகளை தெரிவித்த அஸ்வின் “நீ எப்போதும் என்னிடம் தொடர்ந்து கேட்கும் அந்த ஒரு கேள்வி ‘நீ என்னை மிஸ் பண்ணுவியா ?’ …ஆம் நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ” என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |