குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலையின் வீட்டிற்கு நடிகை சகிலா சென்றுள்ளார் .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மணிமேகலை . சமீபத்தில் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டதாக மணிமேகலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதனால் இரண்டு வாரங்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள இயலாது என அவர் கூறியிருந்தார். இந்நிலையில் மணிமேகலையை சந்திக்க நடிகையும் குக் வித் கோமாளி போட்டியாளருமான சகிலா அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் . அப்போது ஷகிலாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மணிமேகலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.