குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற ரித்திகா உடல்நலக்குறைவு காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜய் டிவியில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ரித்திகாவிற்கு திடீரென குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழ் மற்றும் சிவாங்கி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.