குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் செலிபிரிட்டி சுற்று நடைபெற்றுள்ளது. இதில் போட்டியாளர்கள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்டு சமையல் செய்ய வேண்டும். நடிகை சகிலா தன்னுடைய வளர்ப்பு மகள் மிலாவையும், தீபா தன்னுடைய உறவினரையும், தர்ஷா தன்னுடைய அம்மாவையும், மதுரைமுத்து தன்னுடைய நண்பர் ஆதவனையும், அஸ்வின் தன்னுடைய நண்பர் சாண்டியையும், ரித்திகா தன்னுடைய அம்மாவையும், கனி தன்னுடைய தங்கை நிரஞ்சனாவையும், பவித்ரா தன்னுடைய நண்பரையும் அழைத்து வந்துள்ளனர். இவர்களில் பவித்ராவுடன் வந்த இளைஞர் யார்? என சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து பவித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘எனது குடும்பத்தினர் சென்னைக்கு வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை . இதையடுத்து எனது நண்பர்களில் சமைக்க தெரிந்த ஒரே ஒரு நண்பர் இவர்தான். இவர் பெயர் சுதர்சன் கோவிந்த். இந்த நிகழ்ச்சியில் இவர் எனக்கு உறுதுணையாக வந்து உதவி செய்ததற்கு மிகப்பெரிய நன்றி. சமையலில் இவர் அகில உலக சூப்பர் ஸ்டார் மற்றும் என் உண்மையான நண்பர்களில் ஒருவர்’ என பதிவிட்டுள்ளார்