குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எடுத்த கடைசி புகைப்படத்தை அஸ்வின் வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முடிவுக்கு வந்துள்ளது. மேலும் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த இறுதிப் போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், சகிலா, பவித்ரா ஆகிய 5 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிம்பு, பிக்பாஸ் முகின் ராவ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எடுத்த கடைசி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அஸ்வின்-சிவாங்கி இருவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.