Categories
மாநில செய்திகள்

கீழ்த்தரமான பேச்சு..! திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் நேரில் புகார்..!!

திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் நேரில் புகார் அளித்துள்ளார்..

சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இந்த  பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பூ நேரில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தனது ட்விட்டர் பதிவில், குஷ்பு சுந்தர் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவை சந்தித்தார். சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெண் தலைவர்கள் குறித்து திமுகவின்  சைதை சாதிக் அவதூறாக பேசியது தொடர்பாக இன்று புகார் அளிக்கப்பட்டது.

இந்த சைதை சாதிக் என்பவர் தொடர்ந்து இது போன்ற சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். அவரது கருத்துகளுக்கு இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், திமுக மூத்த அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் கருத்து தெரிவித்ததாகவும், ஆனால் பேச்சை நிறுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.” என்று தெரிவித்துள்ளது.

இதேபோல நடிகை குஷ்புவும் புகார் அளித்தது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்,  தேசிய மகளிர் ஆணைய தலைவி ஸ்ரீமதி ரேகா சர்மாவை சந்தித்து புகார் அளித்ததாகவும், திமுக அறிவாலயத்தை டேக் செய்து  என்னைப் பற்றியும் எனது சக ஊழியர்களைப் பற்றியும் மிகவும் கீழ்த்தரமாகப் பேசியுள்ளதாகவும்,  பேச்சு வார்த்தையில் மகிழ்ந்து அசுத்தத்திற்கு பங்கம் விளைவித்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே சைதை சாதிக் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குஷ்பூ நேரடியாகவே தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்..

Categories

Tech |